எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்? தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் (2013-2014) எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களும், பொருளாதாரம், மனையியல், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர முடியும். இவர்கள் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு பிளஸ் 2 படித்து பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிக்க விண்ணப்பிக்க முடியாது. குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்துக...
Posts
Showing posts from July 27, 2013