ஆசிரியர் தகுதி தேர்வு மேல் முறையீடு: கருணாநிதி கண்டனம்-Dinamani ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சான்று சரிபார்ப்பு ஏற்கெனவே முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. இது மிகத் தவறான முடிவாகும்.ஆசிரியர்கள் எல்லாம் மன நிறைவு தரும் முடிவு என்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அரசு மேல் முறையீடு செய்தால், அது ஆசிரியர்களுக்கு எதிராகஎடுத்த முடிவாகவே இருக்கும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாட முதலில் அனுமதி மறுத்து, தற்போது மீண்டும் வாதாட நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்குரைஞர் பகத்சிங், தமிழில் வாதாட அனுமதியளித்தநீதிபதி ஆகியோருக்கு நன்றி என கருணாநிதி ...
Posts
Showing posts from July 21, 2013
- Get link
- X
- Other Apps
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு:1.59 லட்சம் பேர் எழுதினர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் லட்சம்பேர் இன்று (ஜூலை 21) எழுதினர்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,914பேர் வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சென்னையில் 12 ஆயிரத்து 908 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 1,019 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமின்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ், வணிகவியல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் எளிமையாக இருந்ததாகவும், வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் சற்றுக்கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.