முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டி தேர்வு: 1 ½ லட்சம் பேர் நாளை எழுதுகிறார்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை–1 பதவிகளுக்கான போட்டித் தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டன. மீது முள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 57,134 ஆண்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 526 பெண்களும் அடங்குவர். பார்வைத் திறன் குறைவுடையோர் 971 பேரும், மாற்றுத் திறனாளிகள் 7535 பேரும் இத்தேர்வை எழுதுகிறார்கள். இதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 32 மாவட்டங்களில் 421 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 8383 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள். சென்னையில் 55 மையங்களில் தேர்வு நடக்கிறது. 13927 பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஆண்கள் 3649 பேரும், பெண்கள் 10278 பேரும் போட்டித் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள். பார்வைத்திறன் குறைவுடைய விண்ணப்பத்தாரர்...
Posts
Showing posts from July 20, 2013
- Get link
- X
- Other Apps
ஜனவரி முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் சென்னை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, "பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது. "பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும் பட்ட தாரி ஆசிரியர், எம்.எட்., - எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதிகளை, கூடுதலாக பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்" என கடந்த ஜன., 18ம் தேதியிட்ட அரசாணையில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், எந்த தேதியில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை, அரசாணையில் கூறவில்லை. இதனால், 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியாமல், அவதிபட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி,"தினமலர்&' நாளிதழில், கடந்த ஜூன், 12ம்தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, அரசாணையில் இருந்த குழப்பத்தை சரிசெய்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, புதிய உத்தரவை வெளியிட்டு உள்ளார். கடந்த ஜனவரியில் வெளியிட்ட அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது ...