வேலைவாய்ப்புக்கு 90 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் தகவல் சேலம்: "தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 90 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்," என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பிரகாஷ் கூறினார். சேலம் பெரியார் பல்கலை கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் வேலையை தேடுவோருக்கும், வழங்குவோருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த வேலைவாய்ப்புஅலுவலகம் மூலமாக, ஆண்டு ஒன்றுக்கு 30 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், மாதந்தோறும், குறைந்தபட்சம், 5,000 பேர் வரை தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை காரணங்களை கண்டறியும் வகையில், பல்கலை மற்றும் உயர்கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறுமாற்...
Posts
Showing posts from July 17, 2013
- Get link
- X
- Other Apps
TET - மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலைபட்டம் பெற்று, பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது. ஆசிரியர் பணிக்காக, தகுதி தேர்வு எழுத, மைக்ரோ பயாலஜி, சமூக பணி, சமூகவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், பி.எட்., முடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது. புதுச்சேரியில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு பி.எட்., டி.டி.எட்., படிப்புக்கு கடந்த2007 வரை சென்டாக் கவுன்சிலிங் மூலம் இடங்கள் நிரப்பட்டது. அதில், மைக்ரோ பயாலஜி, சமூகப் பணி உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு இடங்களை வழங்கியது. அரசே, இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, தற்போது தகுதியில்லை என்று கூறுவது, பட்டதாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை இயக்குநர் வல்லவன் கூறுகையில், "தமிழகம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வையே, புதுச்சேரி ஆசிரியர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின்...
- Get link
- X
- Other Apps
2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலைஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு. 2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 1 20.07.2013 சனிக்கிழமை காலை 10மணி மாவட்டத்திற்குள் 2 22.07.2013 திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் : 1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது. 2. 2013-14ம் கல்வியாண்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படவேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள...