முதுகலை ஆசிரியர் தேர்வு - ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம்செய்ய : டி.ஆர்.பி., எச்சரிக்கை "முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த, 1.68 லட்சம் பேரில், இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே,"ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள், உடனடியாக,பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என, டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது. டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: வரும், 21ம் தேதி, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, தங்களின், "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும், 63 ஆயிரம் பேர், பதிவிறக்கம் செய்யவில்லை. தேர்வு தேதி நெருங்கி வருவதால், அனைவரும், உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என, நினைத்தால், தேவையில்லாமல் பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக, &q
Posts
Showing posts from July 16, 2013
- Get link
- X
- Other Apps
சென்னை : குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, 16.13 லட்சம்பேர், ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு,290 பேர், முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன், நேற்று மாலை, நிருபர்களிடம் கூறியதாவது:"அரசுத் துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்ப வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 5,566குரூப் - 4 பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகியோர், இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இன்றிரவு, 11:59 மணி (நேற்றிரவு) வரை விண்ணப்பிக்கலாம்என, அறிவித்திருந்தோம். ஜூன், 14ம் தேதி முதல், இன்று மாலை, 4:00 மணி வரை, 16.13 லட்சம் பேர், ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். தேர்வாணையம், இதுவரை நடத்திய தேர்வுகளில், இதுவே, மிகப்பெரிய தேர்வாக அமைந்துள்ளது.இத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, தேர்வாணையத்தின் மீது, தேர்வர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரத