நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்–2 தேர்வு அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது; 3 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. திட்டம். குரூப்–2 தேர்வு தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), உதவி வணிகவரி அதிகாரி, சார்–பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது.முன்பு நேர்காணல் கொண்டபதவிகள், நேர்காணல் இல்லாத பதவிகள் இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டு வந்தது.அண்மையில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி, நேர்காணல் உள்ள பணிகளுக்கு தேர்வு தனியாகவும், நேர்காணல் அல்லாத பணிகளுக்கானதனித்தேர்வும் முதல்முறையாக நடத்தப்பட உள்ளது. 3 ஆயிரம் காலி இடங்கள் 2013–2014–ம்ஆண்டுக்கான வருடாந்திர காலஅட்டவணையின்படி, இந்த ஆண்ட...
Posts
Showing posts from July 11, 2013