Posts

Showing posts from July 10, 2013
டி.இ.டி., தேர்வை வற்புறுத்தாமல் 94 பேருக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு "ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட்டில் பிறப்பித்த உத்தரவுக்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள், ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டியதில்லை" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இலவச கட்டாய கல்வி சட்டம், 2010, ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தான் நியமிக்க வேண்டும். தமிழக அரசும், இதற்கான உத்தரவை, 2011, நவம்பரில் பிறப்பித்தது. இந்நிலையில், தமிழகத்தில், பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான நடவடிக்கை துவங்கியது. "ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தான், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்" என, 2011, நவம்பர் மாதம், பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பலர், வழக்கு தொடுத்தனர். அதில், "தங்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, சான்றிதழ் சரிபார்ப்புமுடிந்துவ...