அரசுபள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு:கல்விப்பணி பாதிக்கும் என, தலைமை ஆசிரியர்கள் புகார்-Dinamalar மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பம் விற்பனை மையமாக, பள்ளிகளை பயன்படுத்துவதை, உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதனால், கல்விப்பணிகடுமையாக பாதிக்கும் என்றும், தலைமை ஆசிரியர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி:மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.ஆர்.பி., நடத்துகிறது. அரசு பள்ளிகளில், இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என்றாலும், தனியார் பள்ளிகளில், இந்த வேலையில் சேர வேண்டும் என்றாலும், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதனால், அரசுப் பணியை மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில், பணியை எதிர்பார்ப்பவர்களும், டி.இ.டி., தேர்வை எழுதுவர். அத்துடன், ஏற்கனவே பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஐந்து ஆண்டு களுக்குள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆச
Posts
Showing posts from June 16, 2013
- Get link
- X
- Other Apps
"டி.இ.டி., தேர்வில் நுண்ணறிவை சோதிக்கும் வினாக்கள்": தினமலர் பயிற்சி முகாமில் தகவல் "ஆசிரியர் தகுதித் தேர்வில், வினாக்கள் நேரடியாக இல்லாமல், நுண்ணறிவை சோதிப்பதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை புரிந்து, படிக்க வேண்டும்" என தினமலர் நடத்திய பயிற்சி முகாமில் நிபுணர்கள் பேசினர். வரும் ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டி.இ.டி., தேர்வு) இலவச பயிற்சி முகாம், தினமலர் நாளிதழ் சார்பில், மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நேற்று நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1க்கு, காலை அமர்விலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 க்கு, மாலை அமர்விலும் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர். அவர்கள் பேசியதாவது: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் (சூழ்நிலையியல், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், குடிமையியல்): இது போட்டித் தேர்வல்ல. தகுதித் தேர்வு. இடைநிலை ஆசிரியர்கள் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்துவர் என்றாலும், 6 முதல் 10ம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும். வினாக்கள் நேரடியாக இல்லாமல், உங்கள் நுண்ணறிவை சோதிப்பதாக, பகுப்பாய்வு ச