Posts

Showing posts from June 11, 2013
ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் நெல்லையில் கிருஷ்ணசாமி பேட்டி நெல்லை, ஜூன் 11: புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான 76 சமுதாய மக்களே தாழ்த்தப்பட்ட பிரிவைசார்ந்தவர்கள் ஆவர். எஸ்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் குறிக்காது. 76 ஜாதிகளின் உட்பிரிவைஇந்திய அரசு �சமூக நீதித்துறை� என்ற ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 76 ஜாதிகளின் உட்பிரிவுகளை கண்காணிக்கும் துறையை �ஆதிதிராவிடர் நலத்துறை� என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். பல ஜாதிகள் அடங்கிய எஸ்.சி. பிரிவுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் நலத்துறை இருப்பது கூடாது.எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு 18% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என்பது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதில் தொடர்ந்து இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழகஅரசு வெள...