Posts

Showing posts from June 10, 2013
ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி தேர்வு வாரிய தலைவரை நீக்கம் செய்ய கோரிக்கை  சென்னை, ஜூன் 10: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர்தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக்குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது: கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது.  இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.  ஆசிரியர் பணி நியமனம் செய்யும்போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ்வொரு பாடத்துக்குமான காலி இடங்க
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு  சென்னை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ப.சிவகுமார், மு.திருமாவளவன் மற்றும்முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் இணைந்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.  அப்போது அவர்கள் கூறியதாவது:– தேசிய ஆசிரியர் கல்வி கழக நெறிமுறைகளின் 9–ம் விதிப்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும். ஆனால் சென்ற ஆண்டு தமிழக அரசு நடத்திய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்காமல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  இடஒதுக்கீட்டை முறையாக கடைபிடித்திருந்தால் கூடுதலாக 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை கிடைத்து இருக்கும். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிதாக பணி நியமனம் நடத்த வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நி
தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.  தமிழகத்தில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, போட்டித் தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மே, 31ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2 லட்சம் பேர் வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.  2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கும்போதே, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றி வரும் பள்ளியில், தங்களது வருகைப்பதிவேடு, வகுப்பு எடுத்த கால அட்டவணை ஆகியவற்றின் நகலுடன், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கையெழுத்து மற்று
ஆசிரியர் நியமனம்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல் -Dinamani ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றகருத்தரங்கில் பேசுகிறார் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் ,டி.நீதிராஜன், வே.வசந்திதேவி, பி.சண்முகம், பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.  தகுதித் தேர்வோடு இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும்"வெயிட்டேஜ்' வழங்கி இந்த அரசாணை கடந்தஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டது.  ஆனால், இந்த அரசாணை அனைத்துப் பிரிவினரையும் சமமாகக் கருதுவதாகவும்,இடஒதுக்க
கடலூர் மாவட்டத்தில்: 168 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கடலூர் மாவட்டத்தில், இந்த ஆண்டில், 168 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படுவதாக கடலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  உதவி தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை வகித்தார். மாவட்டத்தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் 168தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்வழியில் பாடம் நடத்தி வந்த ஆசிரியர்கள், இனி ஆங்கில வழியில் நடத்த சிரமப்படுவார்கள்.  இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு ஆங்கில வழிப் பாடம் நடத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் குழந்தைகள், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைகுறைவானது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க