Posts

Showing posts from June 9, 2013
தினமலர் » சிறப்பு பகுதிகள்செய்தி »டீ கடை பெஞ்ச் மெம்பர் - செகரட்டரியை, கட்டாய மருத்துவ விடுப்புல, போகச் சொல்லிட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி. ""எந்த துறை விவகாரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.  ""ஆசிரியர் தேர்வு வாரியத்துல, மெம்பர் - செகரட்டரியா இருக்கற அவர்,ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள்ல, ஐகோர்ட்டுல, பதில் மனுக்களை, தாக்கல் செய்யாம விட்டுட்டாரு... ""இதனால, தேர்வு வாரிய தலைவர், கோர்ட்கண்டனத்துக்கு ஆளானதோட இல்லாம, வழக்குல சம்பந்தப்பட்ட, 19 பேருக்கு, வேலை தரணும்னு, கோர்ட், உத்தரவு போட்டுடுச்சு...  இதனால, தகுதியில்லாதவங்கன்னு நிராகரிச்சவங்களுக்கு, வேற வழியில்லாம, போஸ்டிங் தந்தாங்க... ""இந்த சம்பவத்தால, சேர்மன் சூடாகி, சம்பந்தப்பட்ட இயக்குனரை,"சஸ்பெண்ட்' செய்யணும்னு, அர”க்கு, கடிதம் எழுதியிருக்கார்... நடந்த சம்பவங்களுக்கு, மெம்பர் - செகரட்டரிதான் காரணம்னு சொல்லி, அவரை, கட்டாய மருத்துவ விடுப்புல போகச் சொல்லிட்டார் பா... '' என, ஒரே மூச்சில்முடித்தார் அன்வர்பாய்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலைபள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை ( திங்கட்கிழமை ) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன . விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17– ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் .  ஆசிரியர்   தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8– ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது . அதன்படி , 23.8.2010 முதல் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு , தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது .  கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர் . மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்...
அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்   சிவகங்கை: அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12,2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்...