தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்! பாதிப்பில் ஆசிரியர்கள் நெல்லை மாவட்டத்தில் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத சுமார் 200 ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . குழந்தைகளுககான இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டம் 2009 (4) ன்படி பிரிவு 23 உள்பிரிவு (1) ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது . மேலும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும் இதனை அங்கீகரித்துள்ளதோடு இதனை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயித்துள்ளது . எனவே 23.08.2010 க்கு , பின்பு சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிடடுள்ளார் . அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி நெல்லை , தென்காசி , சேரன்மாதேவி கல்வி மாவட்டங்களின் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தகுதி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது . மாவட்டத்தி...
Posts
Showing posts from June 8, 2013
- Get link
- X
- Other Apps
பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள்காலி பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் ( டி . இ . ஓ .), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ( சி . இ . ஓ .), 3 இணை இயக்குநர் , 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன . இந்த கல்வியாண்டு ஜூன் 10- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர் . மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடவும் , இலவச லேப்டாப் , கணித உபகரணப் பெட்டி , கலர் பென்சில்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவும் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர் . மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் , மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய இயக்குநர் பணியிடங்களும் , தேர்வுத்துறை இணை இயக்குநர் ( மேல்நிலை ) உள்பட 3 இணை இயக்குநர் பணியிடங்களும் 4 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன . இந்த இடங்களில் இப்போது அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன . விருதுநகர் , சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மாவட்...
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. சென்னை: ஜூலை, 21ல் நடக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,ஜூலை, 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது. டி.ஆர்.பி., நடத்தும் இந்த தேர்வுக்காக, கடந்த மாதம், 31ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள்தெரிவித்தன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி கடைசி நாள். அடுத்த ஒரு வாரத்திற்கு, மேலும் சில ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளன.