Posts

Showing posts from June 6, 2013
அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: போலியான அனுபவ சான்றிதழ் சமர்ப்பித்தால் கிரிமினல் நடவடிக்கை ஆசிரியர் தேர்வுவாரியம் எச்சரிக்கை அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போலியான அனுபவ சான்றிதழை சமர்ப்பித்தால் விண்ணப்பதாரர் மீதும், அந்த சான்றிதழை வழங்கிய கல்வி அதிகாரி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது 1,093 காலி இடங்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தின்போது பின்பற்றப்படும் எழுத்துத்தேர்வும் இல்லாமல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பும் இல்லாமல், புதிய முறையில் இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப இருக்கிறது. பணி அனுபவம், உயர்கல்வித்தகுதி, ஸ்லெட், நெட் தேர்ச்சி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வுக்கு 9 மதிப்பெண்ணும், பி.எச்டி. கல்வித்தகுதிக்கு 9 மார்க்கும்