ஆண்/ பெண் அரசு பள்ளிகளில் - ஆசிரியர்கள் பாலின அடிப்படையில் நியமனம். மே 28 - GO No 145 இன் படி... தமிழகத்தில் இனி அரசு ஆண்கள் பள்ளிகளில் - ஆண் ஆசிரியர்களும் அரசு பெண்கள் பள்ளிகளில் - பெண் ஆசிரியர்களும் மட்டுமே பணியமர்த்தப்படுவர். தலைமை ஆசிரியர்கள் பெண்கள் பள்ளிகளில் பெண் தலைமை ஆசிரியராக மட்டுமே இருக்க இந்த அரசு விதியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபாலாரும் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு முன் உரிமை அளிக்கும் படியாகவும் இந்த விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான ஆசிரியர் பணியிட மாற்ற கலந்தாய்வு முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் இது தீவிர அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , இந்த TET தேர்விலும் PG TRB தேர்விலும் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்வோரும் இவ்விதிகளின் படியே பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
Posts
Showing posts from June 3, 2013
- Get link
- X
- Other Apps
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு தையல் , ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லி . சித்ரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஓவியம் , தையல் , உடற்கல்வி மற்றும் இசை ஆகிய சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படை யில் நிரப்பப்படவுள்ளன . இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் பதிவு தாரர்கள் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது . எனவே பதிவுதாரர்கள் , இப்பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் . இப்பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் , தங்களது அனைத்து சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வரும் ஜூன் 10- ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .