முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்காக,3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும், நேற்று முன்தினம் முதல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. முதல் நாளன்று, 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 3,500 விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. நேற்று, மாநிலம் முழுவதும், 14 ஆயிரம் விண்ணப்பங்களும், விற்பனை ஆயின. 1.5 லட்சம் பேர் வரை, விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது
Posts
Showing posts from June 2, 2013
- Get link
- X
- Other Apps
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியாகாததால் குழப்பம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, வெளியிட தாமதம் ஆவதால், பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு டி.சி., கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. தமிழகத்தில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்படுகின்றன. 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், பள்ளிகள் இல்லாத இடங்களில், புதிதாக, 54 துவக்கப் பள்ளிகள் துவக்கவும் அரசு முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், அவை எந்த பள்ளிகள் என்ற விவரத்தை, அரசு இன்னும் அறிவிக்கவில்லை. பள்ளிகளை திறக்கும்நாள் நெருங்கி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியலை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் வெளியிடவில்லை. இதனால், தங்களது பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளதா என, தெரியாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தரம் உயர்வைஎதிர்பார்த்து காத்திருக்கும் நடுநிலைப் பள்ளிகள், தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, டி.சி., கொடுப்பதா, வேண்டாமா என, தவித்த
- Get link
- X
- Other Apps
TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: TET - ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. இதில் உளவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) காலை 10 மணிக்கு பல்லடம் காவல்நிலையம் எதிரேஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள அம்பேத்கர் பயிற்சி