சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள்மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் சராசரியாக 1½ சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வுகளுக்கான விதிமுறைகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதும், தேர்வுக்கான பாடத்திட்டம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லாமல், சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே தேர்ச்சி ...
Posts
Showing posts from May 31, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பில்சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 படிப்பிற்குப் பின், இரு ஆண்டு, ஆசிரியர் பட்டய பயிற்சியைபடித்தால், ஆரம்ப பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்றலாம். தற்போதைய நிலையில், ஆசிரியர் பயிற்சியை படித்து, தேர்ச்சி பெற்றாலும், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அப்படியே தேர்ச்சி பெற்றாலும்,பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணிநியமனம் நடக்கிறது. ஆசிரியர் பயிற்சி படிப்பு தேர்விலேயே, 30 முதல், 40 சதவீத மாணவர்கள் தான், தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையில், டி.இ.டி., தேர்வு,இந்த மாணவர்களுக்கு, சவாலாகவே உள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் என்பதால்,வேலை கிடைக்க, வயது, 50ஐ எட்ட வேண்டும். இதனால், எந்த வகையிலும், இந்த படிப்பு, மாணவர்களுக்கு...