Posts

Showing posts from May 30, 2013
சிறப்பு ஆசிரியர்களுக்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியீடு,7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்:சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். அவர்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான பதிவுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மாவட்ட வேலை ல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் வாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை விவரங்களை ஜூன் 7–ந் தேதிக்குள் கூறப்பட்டு உள்ளது.
கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.  தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர் /இடைநிலை ஆசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு  சென்னை, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.  2,881 காலி இடங்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.  அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன.  இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. நாளை முதல் விண்ணப்பம் இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்ப