Posts

Showing posts from May 28, 2013
கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்  கல்வி பெறும் உரிமை சட்டம்என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார்.  கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   கோவா மாநில முதல்வர் மனோகர் பரிகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் குறித்து கடுமையாக தாக்கி பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கல்வி பெறும் உரி‌மை சட்டம் என்பது நல்ல விஷயம் தான்; நான் அதை தடுக்கவில்லை; ஆனால் அச்சட்டத்தை அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது; முறைப்படுத்தப்படாத ஒரு சட்டத்தை அமல்படுத்த நினைப்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கையையே காட்டுகிறது;   அவரது கொள்கைப்படி கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கல்வி என்பது கேலிகூத்தாகி விடும்; அதிக அளவிலான மாணவர்கள் 9ம் வகுப்புக்கு தானாகவே வந்து விடுவர்; மாணவர்கள் தேர்வுக்கும் வ...
அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 ஆகும்.  ஆசிரியர் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பெண்ணும், அடுத்தக் கட்டமாக நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண்ணும்வழங்கப்படும். மொத்தம் 34 மதிப்பெண்அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் .பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் (அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்: கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மத...
மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.  தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.  கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும். மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2010-க்கு முன்புஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணிவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.  புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர...