196 தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 27-ல் பணி நியமன கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தாவரவியல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 196 பேருக்கு திங்கள்கிழமை (மே 27) பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 310 இளநிலை உதவியாளர்களுக்கும் ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,800-க்கும் அதிகமானோரைத் தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாவரவியல் ஆசிரியர்களின்தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தாவரவியல் ஆசிரியர்கள் 196 பேர் கொண்ட பட்டியல் பள்ளிக் கல்வித் துறையிடம் அண்மையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அ
Posts
Showing posts from May 25, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு, தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார். தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா? ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத