Posts

Showing posts from May 24, 2013
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை சென்னை: தொடக்க கல்வித் துறையில், பதவிஉயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை, அறிக்கை சமர்ப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுபெற்று, தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற வழியில்லாமல், பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். ஒரே தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களில், பள்ளி கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என, பல பதவி உயர்வுகளை பெறுகின்றனர். அதே தகுதியுடன், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியைத் தவிர, வேறு எந்த பதவி உயர்வும் பெற முடிவதில்லை. நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படுவதால், இருக்கும் ஒரே பதவி உயர்வும், பாதிப்பதாக புலம்பி வருகின்றனர். இந்நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் கலந்தாய்வு -கோர்ட் தடையால் நிறுத்தி வைப்பு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், .. பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2001 டிச., 31ல், முதல் நிலை மொழியாசிரியர்கள், பணி நியமனம் பெற்றவர்கள், பி.எட்., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது. மற்ற பாட ஆசிரியர்களுக்கு, 2013, ஜன., 1 வரையிலான பதவி மூப்பு, கருத்தில் கொள்ளப்பட்டது. தமிழ் மொழியில், பி.லிட்., பட்டம் பெற்றவர்கள், நேரடியாக தமிழாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், பி.எட்.,பட்டம் பெறாததால், தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியாது. கடந்த, 2001டிச., 31க்கு முன், பி.எட்., பட்டம் பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே, தலைமையாசிரியர் பத