Posts

Showing posts from May 23, 2013
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் "பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அம்மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுமீதான விசாரணை, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா தலைமையிலான, அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முறையான கல்வி தகுதி இல்லாதவர்களை, தற்காலிக ஆசிரியர்களாக நியமிப்பது, கல்வி முறையின் அடிப்படையையே பாழாக்கி விடும்; பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டே கல்வி கற்பிக்க வேண்டும். வழக்கமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை, அவர்களுக்கானசம்பளம் விகிதம் குறித்த விவரம் தரவேண்டும். குஜராத் அரசு மேற்கொள்ள உள்ள, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் தமிழ் வழி படித்தவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு 7 மையங்களில் இன்று ஆரம்பம். முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் 7 மையங்களில் சான்றிதழ்சரி பார்ப்பு பணி இன்று (23ம் தேதி) ஆரம்பமாகிறது.தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 நியமனத்திற்கான எழுத்துதேர்வு நடந்தது. இதற்கான விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை கோரியர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது.இதில் வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களில் தமிழ் வழிக்கு ஒதுககப்பட்ட பணி இடத்தில் பெரும்பாலானவர்கள் உரிய சான்றிதழ்களைசமர்ப்பிக்கவில்லை. எனவே, மீதமுள்ள பணி நாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மார்க் பெற்றவர்கள் மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரி பார்க்க தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நாடுனர்களின் விபரம் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம்,விழுப்புரம், சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று...
ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - சில குறிப்புகள் 1.ரூ .50 ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் , தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம். 2. தேர்வு கட்டணம்: ஒவ்வொரு தாளுக்கும் ரூ .500 எஸ் . சி / எஸ்டி பிரிவினருக்குரூ .250 மாற்றுதிரனாளிகளுக்கு ரூ .250 3. விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் 4. பாரத் ஸ்டேட் வங்கி , கனரா வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம் , 5 டி . ஆர் . பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும் 6. ஓ , எம் , ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் 7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும் . 8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் , விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது . 9. ஆன்லைன் , தபால் , ...
டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை தமிழக அரசு கைவிரிப்பு  டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள்பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.  பல மாநிலங்களில் சலுகை : அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி.,- எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதி...
ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் டி.இ.டி., தேர்வுகள்: டி.ஆர்.பி., அறிவிப்பு சென்னை: "ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக நடக்கும் இத்தேர்வை, ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் எழுதுவர் என, எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து வினியோகிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.  அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் விதி. அதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில், இரண்டு, டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது.  முதல்தேர்வில், வெறும், 2,448 பேர் தேர்ச்சிபெற்றனர். குறைவான நேரம், கடினமான வினாத்தாள் ஆகியவற்றால், தேர்வர்கள் திணறினர். இதனால், அக்டோபரில் நடத்திய மறுதேர்வில், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள், சராசரி அளவில் இருக்கும் வகையில், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்த தேர்வி...
ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம் நெல்லை: ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் சேர தமிழகத்தில் தகுதி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, முதல் முறையாக 22 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இதையடுத்து, அக்டோபர் மாதம் 14ம் தேதி மீண்டும் தகுதித் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கு விண்ணப்பித்திருந்த 88 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 1...