விரைவில் டிஆர்பி மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டு வரை இந்த கலந்தாய்வுக்கு தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 20,203 தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில்முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில...
Posts
Showing posts from May 21, 2013
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது. இதற்காக, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 14 வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை வழங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கு தேர்வு நடப்பதால், இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. முந்தைய தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு, விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சென்னை, கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து,அதிக தேர்வர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த மாவட்டங்க...
- Get link
- X
- Other Apps
இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கல்வி உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமைவிசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது: கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பும் இடைக்கால ஆசிரியர் நியமன முறை தொடர்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21-ஏ பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையானகல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை த...
- Get link
- X
- Other Apps
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டு வரை இந்த கலந்தாய்வுக்கு தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 20,203 தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில்முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதன்முறையாக மாவட்டங்களில் நடைபெ...
- Get link
- X
- Other Apps
தகுதி இல்லாதவர்கள் நியமனம் சிறப்பு ஆசிரியர்களால் கல்வி அழிகிறது புதுடெல்லி, மே 21: ஆரம்ப பள்ளிகளில் மாநில அரசுகள், போதிய கல்வி தகுதி இல்லாத சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில ஆரம்ப பள்ளிகளில் �சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்பும், இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வி உதவியாளர்களாக நியமிக்கப்படும் இந்த சிறப்பு ஆசிரியர்களின் கல்வி தகுதியை அறிய விரும்புகிறோம். உத்தரப் பிரதேசத்தில் �சிக்ஷா சகாயக்� என்ற பெயரில் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் உதவியாளர்கள் அல்ல கல்வியின் எதிரிகள். நாம் அளிக்கும் கல்வியின் தரம் மிக முக்கியம். முறையான கல்வி தகுதியில்லாத சிறப்பாசிரியர்களை நியமிப்பதால், ஒட்டுமொத்த கல்வி முறையை அழிக்கிறோம்” என்றனர்.
- Get link
- X
- Other Apps
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை. தற்@பாது, இதில்,பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில், 120 இடங்களை நிரப்ப, வரும், 23, 24 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய ஏழு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.