Posts

Showing posts from May 18, 2013
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணியிடம் விரைவில் நிரப்ப நடவடிக்கை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்(ஆர்.டி.ஓ.,) காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 1.70 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டும், 1.41 கோடி. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 70 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள், 19 சோதனை சாவடிகள் உள்ளன. புதிய வாகனங்களின் பதிவு, வாகனங்கள் உரிமம் புதுப்பித்தல், வாகனங்களின் ஆய்வு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள், வட்டார போக்குவரத்து அலுவகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த, 2012 - 13ம் ஆண்டில், போக்குவரத்து துறையில், உதவியாளர், 146; சுருக்கெழுத்து தட்டச்சர், 8; இளநிலை உதவியாளர், 43; தட்டச்சர், 44; அலுவலக உதவியாளர், 26; காவலர், 14, என, மொத்தம், 281 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களை பொற...
பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம் தமிழக ஒட்டு மொத்த வரலாற்றில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்காக நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைஅருகே வெள்ளைக்கோட்டையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அதிமுகவின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். இதில், நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது: அதிமுக அரசின் கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவருகிறார். தற்போது, 3-வது முறையாக 12 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பை வகித்து, 13-வது ஆண்டாக ஆட்சி செய்யும் உரிமையைதமிழக மக்களிடம் இருந்து முதல்வர் பெற்றுள்ளார். இதேபோல், எம்.ஜி....
மேல்படிப்பு படிப்புக்கு பணம் இல்லாமல் தவிக்கும் விவசாய கூலித் தொழிலாளி மகள் By ஆர்.ஜெயபிரகாஷ், விழுப்புரம் First Published : 18 May 2013 04:46 PM IST விழுப்புரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மேல்படிப்பு சேருவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். விழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வெற்றிச்செல்வி. இவர் அருகாமையில் உள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1056 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-182, ஆங்கிலம்-137, இயற்பியல்-192, வேதியியல்-183, உயிரியல்-185, கணிதம்-177 என மொத்தம் 1056 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பொறியியல் படிக்க விரும்புகிறார். ஆனால் இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. இவரது தாய் மஞ்சுளாவும் விவாசய கூலி வேலை செய்து வந்தார். கட்டட வேலை செல்லும்போது கழி முறிந்து தலையில் விழுந்ததில் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளார். தந்தை முருகனின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவர்கள் குடும்பத்தை நடத்துகின்றனர்.இதனால் அரசுப் பள்...
ஆய்வுக் கூட்டம் தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அவர்களின் தலைமையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / DPC ஆய்வுக் கூட்டம் 22.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்" பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2" பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்" பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும். "ஆப்ஜக்டிவ்" முறையில், 300மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்ப...
ரூ.5 ஆயிரம் மாத சம்பளத்தில் 1,900 பகுதிநேர ஆசிரியர் நியமனம் சான்று சரிபார்ப்பு பணி துவங்கியது நெல்லை: தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.எனினும் பணியை விட்டு விலகியவர்கள், பணியில் சேராதவர்கள் எனமாநிலம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியானது. இந்தஇடங்களை நிரப்பும் பணிகள் கடந்த மாதம்தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் பெறப்பட்டன.விண்ணப்பம் சமர்ப்பித்த ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்று முதல் 8ம் வகுப்புகளில் 5 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள், 10 பகுதி நேர ஓவிய ஆசிரியர...