முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23, 24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழ்வழி முன்னுரிமை இடங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் (கிரேடு–1) நியமனத்திற்கான (2011–2012) போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தமிழ்வழியில் படித்ததற்கான முன்னுரிமை கோரியவர்கள் 3.8.2012 மற்றும் 30.10.2012 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் ஒதுக்கப்பட்ட பணி இடங்களுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, பெரும்பாலான தேர்வர்கள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, இளநிலை பட்டம், முதுகலை பட்டம், பி.எட். பட்டம்ஆகியவற்றை முற்றிலும் தமிழ்வழியில் படித்ததற்...
Posts
Showing posts from May 14, 2013
- Get link
- X
- Other Apps
ஒரே பள்ளியில் 3 ஆண்டுக்கு மேல்வேலை பார்த்தால் டிரான்ஸ்பர் : அரசு உத்தரவு வெளியீடு சென்னை: அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுபிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் நலனுக்காக வெளிப்படையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல்வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பள்ளிக்கல்வி துறைகட்டுப்பாட்டில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் இடையே 2013-14ம் கல்வியாண்டில் பொது மாறுதல்கள் வழங்க கீழ்க்காணும் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். * 3 ஆண்டுகளுக்கு மேல் அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது என்ற பொதுவான ஆணை உள்ளது. இது 201314ம் கல்வியாண்டிலும் தொடரும். ஒரு ஆசிரியருக்கு டிரான்ஸ்பர் தருவதற்காக காரணம் ஏதுமின்றி வேறொரு ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது. * புகாருக்கு உள்ளாகும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக அடிப்படையிலான டிரான்ஸ்பர் ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதலில் வழங்க வேண்டும்....
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தத் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விவசாயத் துறை ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Thanks to www.tntam.blogspot.com
- Get link
- X
- Other Apps
TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள். பள்ளிக்கல்வித் துறையில் TETமூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13 வது நிபந்தனை இடம் பெற்றுள்ள தகவல் "TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்” என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள் ஆவர். இதே தகவல் தொடக்கக்கல்வி துறையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பொருந்தும். இருப்பினும் ஒரு ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பம் தகுதியானதா இல்லையா என தரம்பிரித்து ”அ” மற்றும் ”ஆ” பதிவேடுகள் தயார் செய்வது கல்வித்துறை பணியாளர்களின் பணி என்பதால் தாங்களும் தங்கள் பணி மாறுதலுக்கு விண்ணபிக்கலாம். பணி மாறுதல் குறித்த அறிவுரையில் இறுதி கட்டத்தில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் மாற்றம் ஏ...