ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்டஆசிரியர்கள் 2013-14ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில் கடந்த டிசம்பர் 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது எனவும், பொதுவாக புதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் தேதி முதல் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்என்பது விதி. எனவே டிசம்பர் 2012ல்நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்இம்மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற தகுதியில்லை, இதுகுறித்து மாவடத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் கேட்டு உறுதி செய்யப்பட்டதுஎன தெரிவித்தார். எனினும் இதுகுறித்து நமது TNKALVI சார்பாக மேற்படி ஐயங்களுக்கு விடை காண தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரைவில் மேற்படி தகவல்கள் குறித்த நிலை நமது வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும். Thanks to kalviseithi.com
Posts
Showing posts from May 13, 2013
- Get link
- X
- Other Apps
13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "விளையாட்டு துறையை மேம்படுத்த, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், விளையாட்டை வளர்க்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகளில் இல்லாத குறையை, இதுவரை போக்கவில்லை. அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 13.83 லட்சம் மாணவர்களுக்கு, வெறும், 70 உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற நிலை தான் இப்போதும் இருக்கிறது" என, உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மட்டுமே, அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். உடற்கல்வியையும், உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி கல்வித்துறை, ஓரங்கட்டிவிட்டது என, உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். ஒரு அரசு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற, குறைந்தபட்ச நிலையையாவது, தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின், நீண்ட கால கோரிக்கை. ஆனால், புதிய ஆசிரியர் ந