Posts

Showing posts from May 10, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.  சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது: பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.  மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.  எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி    பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கிலமோகத்தால், தங்களது குழந்தைகளை மெட்ரிக்., பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைகிறது. தமிழ் வழிகல்வியில் படிக்கும் குழந்தைகளை கவர, அரசு 14 வகையான பாடப் பொருட்கள் இலவசமாக வழங்கியும் கூட, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.  இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,"ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில் 20 குழந்தைகளை சேர்த்து, 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்க, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.  ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவக்கி, அதன் அறிக்கையை உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதுடன், தலைமை ஆசிரியர்களே தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கையை அதிகப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.
3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்  பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து   சென்னை : நிர்ணயிக்கப்பட்டதை விட அதிககட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் இன்று பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிக கட்டணம் வசூலித்த 2 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏற்கனவே ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.