Posts

Showing posts from May 7, 2013
பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி திருச்சி : " பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர் . தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் , கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது . பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார் . சிறப்பு அழைப்பாளராக கடலூர் பகுதி தலைவர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார் . கால முறை ஊதியம் வழங்க வேண்டும் . அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை , முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . கவுன்சிலிங் மூலம் பணி இடமாற்றம் அளிக்க வேண்டும் . மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யாமல் , மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் அளிக்க வேண்டும் . கோடை விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் . மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் . மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி , திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் துவங்கி , கலெக்ட...
ஆசிரியருக்கு தகவல் அளிக்காதபொதுத் தகவல் அலுவலர் இழப்பீடு வழங்க வேண்டும்! ஆசிரியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு நுகர்வோர் மன்றம் ஆணையிட்டுள்ளது. வினாத்தாளில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு சரியான விடைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டும் அளிக்காத காரணத்தால் மன உளைச்சல் அடைந்த ஆசிரியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்கும்படி கரூர் நுகர்வோர் குறை தீர்மன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என். அரசகுமாரன். இவர் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினார். தேர்வை சிறப்பாக எழுதியதாக நம்பிய இவர், தனக்கு அரசுப் பணி கிடைத்து விடும் என்றும்நம்பினார். தேர்வு எழுதிய பிறகு வினாக்களுக்கு உண்டான விடைகளை தரும் புளு பிரிண்ட்-ஐ ஆசிரியர் தேர்வு வாரியம்இணைய தளத்தில் வெளியிட்டது. அதை அரசகுமாரன் சரிபார்க்கும் போது, அவற்றில் பொருளாதாரப் பாடத்தில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விகளுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு விடைகள் தரப்பட்டிருந்தன. அதே நேரத்தில...