தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் திருநெல்வேலி: ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் மானூர் வட்டார செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் கல்வித் துறை பணியாளர்கள், ஏ.இ.ஓக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங்கை இந்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலின் நகலை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். மின்னணு ஊதிய பட்டியல் தயாரிக்கும் ஆகும் செலவை அரசே ஏற்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Posts
Showing posts from May 3, 2013
- Get link
- X
- Other Apps
டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை குறைக்க வலியுறுத்தல் சென்னை: "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை, சரியாக அமல்படுத்தவில்லை. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள்எடுக்க வேண்டும் என, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. இதனால், 45 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் ஆதி திராவிட தேர்வர்கள், 58 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. பல மாநிலங்களில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும், தகுதி மதிப்பெண்கள் அளவைகுறைக்க வேண்டும். அமைச்சர் பழனியப்பன்: இந்த கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார். பாலபாரதி - மார்க்சிஸ்ட்: இதுவரை, இரு முறை, டி.இ.