Posts

Showing posts from May 2, 2013
தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள்ஆர்வம்  தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையேஆர்வம் அதிகரித்துள்ளது.  முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம், பள்ளிக் கல்வித் துறைக்கு 17 ஆயிரம்கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப் பை, சீருடை மற்றும் கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.  கல்வி மட்டுமின்றி, மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சதுரங்கம், கைப்பந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக,
ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது ? கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடப்பது என்பது சாத்திய குறைவு. ஆசிரிய சங்கங்கள் தகுதித்தேர்வை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதால், TET இரத்தாகுமா? பதிவு மூப்புப்படி நடக்குமா? என்ற கேள்வி அதிகமாக தற்போது எழுகிறது. தற்போதைய சூழல்படி TET தாமதமானாலும், அது நிச்சயமாக நடக்கும் என்பதே. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்துமாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். Thanks to Teachertn.com
ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது. கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது.  இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது.அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடக்காது.  எனவே ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்துமாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர். Thanks to kalviseithi.com
புத்தகம் இன்றி 2011, ஆசிரியர் இன்றி 2013 தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு பாதிப்பு  நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால், வரும் கல்வி ஆண்டில்பள்ளிக்கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர்.  ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது.  தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது.  கல்வியியல் கல்லூரிகள்,