வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:- ஏ.லாசர் (மார்க்சிஸ்ட்): ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு முறையை அமலுக்கு கொண்டு வரவேண்டும். மத்திய அரசு தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் ஆகியோருக்கு, தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை தீர்மானித்துள்ளது. ஆந்திரத்தில்கூட ஆசிரியர்தகுதித் தேர்வில் அதிகபட்ச இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். அங்கு முற்பட்ட வகுப்பின...
Posts
Showing posts from April 28, 2013