Posts

Showing posts from April 27, 2013
நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான"நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாகஅறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.  திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின்,அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது. அதிகபட்சமாக முதல் இரண்டு தாள்களில்தலா 100 மதிப்பெண், மூன்றாவது தாளில் 150 மதிப்பெண் பெற வேண்டும் நிர்ணயித்திருந்தனர்.  தேர்ச்சிபெற குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் முதல் இரண்டு தாள்களில் தலா 40 சதவீதம், மூன்றாவது தாளில் 50 சதவீதம்; இதர பிற்பட்டோர் (கிரிமீலேயர் அல்லாதவர்கள்) முதல் இரண்டு தாள்களில் தலா 35 , மூன்றாம் தாளில் 45 சதவீதம்; ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதல் இரண்டு தாள்களில் தலா 35, மூன்றாம் தாளில் 40 சதவீதம் மதி...
யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வை போல இனி ஆண்டுக்கு 2 தடவை ‘ஸ்லெட்’தகுதித்தேர்வு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு சென்னை யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வைப் போன்று மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வையும் இனி ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.  தகுதித்தேர்வு யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறையின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால். ‘நெட்’ அல்லது ’ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.  அகில இந்திய அளவிலான ‘நெட்’ தகுதித்தேர்வினை யு.ஜி.சி. நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும். ஸ்லெட் தேர்வை நடத்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஸ்லெட்–நெட் தேர்ச்சி தமிழ...