400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம் சென்னை: வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம்தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களைசெயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் வி...
Posts
Showing posts from April 24, 2013
- Get link
- X
- Other Apps
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு: மே 1-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அனைவருக்கும் கல்வி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் கற்பிக்க ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி உடற்கல்வி ஆசிரியர்கள் 55, ஓவிய ஆசிரியர்கள் 27, தையல் ஆசிரியர்கள் 8, இசை ஆசிரியர்கள் 2, கணினி ஆசிரியர்கள் 16, வாழ்வியல் திறன் ஆசிரியர்கள் 2, கட்டுமான ஆசிரியர்கள் 2 என மொத்தம் 112 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத உழைப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பணி நாடுநர்கள், காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 26 முதல் விண்ணப்...