பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே காப்பி அடித்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை...
Posts
Showing posts from April 21, 2013