டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை சென்னை: டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன. குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட, ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை, மீண்டும் மாற்றி அமைத்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொது அறிவு பாடத்திட்டங்கள், திறன் அறிதல் மற்றும் கூர்மையாக சிந்தித்து விடை அளிக்கும் பகுதி ஆகியவை, ஆங்கில வழியில் வெளியிடப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பு தர நிலையில் நடக்கும்குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டங்களும், ஆங்கில வழியில் உள்ளன. இதை, தமிழ் வழியில் வெளியிட்டால், தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விரைவில், இந்தப் பணியை முடித்து, தமிழ்வழியில் வெளியிட, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. குரூப்-4, வி.ஏ.ஓ., பொது தமிழ் பகுதியில், பொருத்துதல், பொருத்தமான பொருளை அறிதல், பொருந்தாத சொல்லை கண்டறிதல், இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியங்கள் உள்ளிட்டவை, பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்
Posts
Showing posts from April 20, 2013