Posts

Showing posts from April 18, 2013
அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள் அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் 30 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இக்கல்லூரிகளில், 15 ஆண்டுகளாக ஆசிரியர், அலுவலர் பற்றாக்குறை நீடிப்பதால் தரமான கல்வி கேள்விக்குறியானது. மாணவர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை.  மேலும் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறையால் "ஷிப்டு" முறை அமலானது. பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து சமாளித்தனர். ரெகுலர் ஆசிரியர்கள் கற்பித்தலுடன், ஆய்வுக்கூடம், பட்டறைகளை நிர்வகிப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தனர். இதனால் வேலைப்பளு அதிகமாக இருந்தது.  இதையடுத்து கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனத்தை சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாலிடெக்னிக்குகளுக்கு துறைத் தலைவர்கள், பேராசிரியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறையின் இந்த உத்தரவில் (அரசாணை எண்: எம்.எஸ்.48, நாள்: 28.3.2013) அரசு பாலிடெக்னிக்குகளுக்கு மாணவர்களின்எண்ணிக்கைக்க
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1591 பேர்: பணி நியமனத்துக்கு அரசு அனுமதி தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றவிகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.  தமிழ் 470,  ஆங்கிலம் 154,  கணிதம் 71, இயற்பியல் 118,  வேதியியல் 115,  உயிரியல் 40,  தாவரவியல் 92, விலங்கியல் 76,  வரலாறு 73, புவியியல் 17,  பொருளியல் 166,  வணிகவியல் 199 என,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  சென்னை 10, காஞ்சிபுரம் 84,திருவள்ளூர் 125, விழுப்புரம் 67,கடலூர் 24, வேலூர் 124, திருவண்ணாமலை 165,தர்மபுரி 79,கிருஷ்ணகிரி 89,சேலம் 73,நாமக்கல் 30,ஈரோடு 61,கோவை 32, திருப்பூர் 45,நீலகிரி 14,திருச்சி 54,பெரம்பலூர் 19,அரியலூர் 31, கரூர் 36,புதுக்கோட்டை 47,தஞ்சாவூர்34,நாகப்பட்டினம் 29,திருவாரூர் 29,மதுரை 49,திண்டுக்கல் 48,தேனி 25,சிவகங்கை 22,ராமநாதபுரம் 30,விருதுநகர் 38, தூத்துக்குடி 24,திருநெல்வேலி 45,கன்னியாகுமரி 6 என, மாவட்ட வா
டி.என்.பி.எஸ்.சி., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்  சென்னை : டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.  புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார்.  இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக, நடப்பு சட்டசபையில், சில எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, "மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, பள்ளிக்கல்வி அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து, புதியபாடத் திட