டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி:அடுத்த வாரம் அறிவிப்பு? டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. போட்டித் தேர்வு: தேர்வாணைய தலைவராக நடராஜ் பதவி வகித்தபோது, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை, தற்போதைய காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தார். பழைய பாடத்திட்டத்தின் கீழ்,குரூப்-2 மற்றும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4 தேர்வுகளில், தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து, அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. பாடத்திட்டம் மாற்றப்பட்ட போது, குரூப்-2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திட்டம், முற்றிலும் நீக்கப்பட்டன. இதற்கான, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டன. "ஆப்டிடியூட்" என்ற புதிய பகுதியும், இத
Posts
Showing posts from April 14, 2013
- Get link
- X
- Other Apps
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாகஉள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர்தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்துவருகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. முதல் தேர்வு: கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்