Posts

Showing posts from April 10, 2013
கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு  கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.   இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞ்சர் திரு.சங்கரன் அவர்கள் வாதாடினார், இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு.எலிட் தர்மா ராவ் மற்றும் திரு.விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர்.  இதனால் வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதிவியுயர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.  இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்குதகுதித் தேர்வு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.  ஆந்திரம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 முதல் 20 சதவீதம் வரைதகுதித் தேர்வு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மதிப்பெண்கள் தளர்த்தப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  69 சதவீத இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் என்பது இட ஒதுக