Posts

Showing posts from April 9, 2013
முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.  இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்
ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்   பிளஸ் 2 விடைத்தாள் திருத்ததற்போது 7.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 1.6.2006க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் இல்லாமல் ஒளிவுமறைவற்ற முறையில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். முதுகலைஆசிரியர் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720யால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, இந்த அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். வரும் கல்வி ஆண்டில் ஆயிரத்து 591 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறுமாநில தலைவர் பேசினார்.