ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்'தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுமையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். சென்னை,மதுரை போன்ற மாநகரங்களில் நடந்த இத்தேர்வு , தற்போது மாவட்டங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு முறையில், ஆன்லைனில் விடையளித்த அன்றே, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு நேரமாக 3மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒன்றரை மணி நேரத்திலே முடித்து விடலாம். மீதமுள்ள நேரத்தில் சரி பார்த்து கொள்ளலாம். இந்தியாவிலே தமிழ்நாடு அரசு பணியாளர்
Posts
Showing posts from April 8, 2013