Posts

Showing posts from April 6, 2013
"புளூபிரின்ட்"படி கேள்விகள் கேட்கவில்லை: சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்" சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில், "புளூபிரின்ட்" (கேள்வித்தாள் அமைப்பு) படி, கேள்விகள்கேட்கவில்லை எனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15மதிப்பெண்கள் வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருதேர்வுகளிலும், குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச் செய்துள்ளது. எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே அட்ட...
10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கடினம்: மாணவர்கள் அதிர்ச்சி-dinamani எஸ்.எஸ்.எல்.சி. கணிதப் பாடத் தேர்வில் கடின வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டைப் போலவே முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கருதப்படுகிறது.  தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முக்கியப் பாடங்களில் ஒன்றான கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடி வினாத்தாள் அமையாததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் யாவும் கடினமானவையாக இருந்தன. சுயமாக யோசித்து பதிலளிக்கும் விதமாக கேள்விகள் இருந்ததால் அவற்றுக்கு பதிலளிக்க நீண்ட நேரம் ஆனது. இதனால் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவதற்கு நேரம் போதவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.  பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள், சராசரி மாணவர்களுக்குத் தேர்வு கடினமானதாக அமைந்துவிட்டதாக ...