Posts

Showing posts from March 29, 2013
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநிலங்கள்: மார்ச் 31 வரை காலகெடு   புதுடில்லி : கல்வி உரிமை சட்டத்தை(ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.  கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன.  மத்திய அரசு உத்தரவு : 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.  2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெட
தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரிஆசிரியரை வெளியேற்ற தடை மதுரை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.  தேனியைச் சேர்ந்த ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு:   நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.  ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வுஎழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.  கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., த