Posts

Showing posts from March 28, 2013
டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.),ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர்.  அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலிபணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாகபணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள்.  இதற்கு பதில் அளித்து நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது :-  அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களைநிரப்பும் அமைப்புக்களான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள், தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.  மேலும் ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன முறைகள் மூலம், பதவிகள் நிரப்பப் பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ...
தமிழுக்கு முக்கியத்துவம்: டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறுதமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதானவிவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா(ராமநாதபுரம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ. சௌந்திரராசன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து  அவர் பேசியது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் திறனறிவுத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழ் மொழிப் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. சில தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டது.  இது குறித்து அரசின் கவனத்துக்கு வந்ததும் தமிழ் மொழிப் பாடத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.