இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும்வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 1...
Posts
Showing posts from March 17, 2013
- Get link
- X
- Other Apps
26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்: ஜெயலலிதா உத்தரவு தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தோற்றுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிப்போருக்கு இணையான சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின்தங்கியஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப்போது அரியலூர், மங்களூர் (கடலூர் மாவட்டம்), காரிமங்கலம், பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் (ஈரோடு மாவட்டம்), குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), தளி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேப்பூர் (பெரம்பலூர் மாவட்டம்), நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை மாவட்டம்), திருநாவலூர், திருவெ...