பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு: பள்ளி கல்வி துறை திட்டம் ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிடமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில்,ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால், கலந்தாய்வு முடியும் வரை, ஆசிரியர்கள், கற்பித்தல் பணியில், ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் உத்தரவு வாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கும் செல்லாமல், மாறுதல் உத்தரவு வாங்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். படிப்பு பாதிப்பு : குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்திப்பதற்காகவும், தங்கள் மாவட்ட அமைச்சரை சந்தித்து, பரிந்துரை கடிதங்களை பெறவும், சென்னைக்கு பறந்து வந்து...
Posts
Showing posts from March 16, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இ. சுடலைமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 6-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும்; தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு முந்தைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாகக் கைவிட வேண்டும்; வேலைவாய்ப்பக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாதச் சந்தாத் தொகையை ரூ.50ஆக குறைத...
- Get link
- X
- Other Apps
அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவு நீக்கம்: வைகோ கண்டனம் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வில் தமிழ் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. இதில் தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களைப்புகுத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே, புதிய பாடத்திட்ட முறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.