Posts

Showing posts from March 7, 2013
ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டம்   ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர். நட்ராஜ் கூறியுள்ளார்.  திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டில் சோதனை முறையில் 11 தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. 10,000 முதல் 15,000 பேர் வரை தேர்வு எழுதினால் இத்தேர்வுகளை நடத்துவதில் பிரச்னையில்லை. அதேநேரத்தில் தேர்வெழுத அதிகமானோர் விண்ணப்பிப்பதால் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்துவதற்குரிய கணினிகளை பெறுவதில் சிரமம் உள்ளது.  எனவே, மாற்று ஏற்பாடாக தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்து ஐஐடி பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குரூப் 2 தேர்வில் தேர்வு பெற்று நேர்காணல் முடித்த 1426 பேருக்கும், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 1400 பேருக்கும் இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.  இனி வரும் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் வினாத்தாள்கள் முன்கூட்டியே
டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த நடராஜின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் புதிய தலைவராக அரசு தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் .
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில்லை: தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.  தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல், டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக ஜூலை 4ம், இரண்டாவது கட்டமாக அக்.,31ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து, தாவரவியல் பட்டதாரிகளை தவிர பிற பிரிவுகளை சேர்ந்த பட்டதாரிகளுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.  அப்போது விடுபட்ட பட்டதாரிகளுக்கு, நேற்று ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் ஒதுக்கி, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தாவரவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர்கூறியதாவது: தாவரவியலில் 500 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக் கல்விச் செயலர் ஆஜர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானார்.  தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்தும் வகையில் 2006-ம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி தாற்காலிக பணியாளர்களான தங்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்று கோரி அரியலூரைச் சேர்ந்த வேதவல்லி உள்ளிட்ட துப்புரவுப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அந்த வழக்கினை விசாரித்தஉயர் நீதிமன்றம் தகுதியுள்ள துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறை செய்யும்படி பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டது. எனினும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தங்களது பணி வரன்முறை செய்யப்படவில்லை என்று கூறி அரசு மீதுநீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை உயர்நீதிமன்றத்தில் வேதவல்லி தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி என். பால் வசந்தகுமார் முன்னிலையில் புதன்கிழமைவிசாரணைக்கு வந்தது. அப்போது த