6முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் வேலூர்: அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வரும் கல்வி ஆண்டில் கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் தற்போது பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமேகம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் பாடத்தை தனி பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குகம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் விவரங்கள் மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள
Posts
Showing posts from March 3, 2013
- Get link
- X
- Other Apps
அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில்சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம் புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்துவிடும். இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உடனடியாக சம்பளம் கிடைத்து விடும். ஆனால் மற்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக சம்பளம் கிடைக்கும். இந்த தாமதத்தை தவிர்க்க, புதிதாக ‘பேரோல் 9.0’ என்ற சாப்ட்வேரை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த
- Get link
- X
- Other Apps
PGT ONLINE COUNSELLING 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமைஅன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 03.06.2013 அன்று பணியில் சேர வேண்டும். 2011-12 ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து 700 இடங்களுக் காக தேர்வு பெற்ற நபர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. 2011-12 ம் ஆண்டில் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் நிரப்பப்படாத காலி இடங்கள் ஆகியவை சேர்த்து , 700 இடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை , பள்ளிக் கல்வித் துறைக்கு , டி.ஆர்.பி. , வழங்கியது. இவர்கள் , வரும் , 5 ம்தேதி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் , " ஆன்-லைன் ' கலந