Posts

Showing posts from March 1, 2013
முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர் . இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது.  பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் ப...