Posts

Showing posts from February 28, 2013
அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது.  6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது.  தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழகஅரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி