Posts

Showing posts from February 20, 2013
முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி.,"பகீர்' தகவல் முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.  தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு,அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.  உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களைஅறிய, அனைத்து பல்கலைகளுக்கும...