Posts

Showing posts from February 19, 2013
கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்  சென்னை: அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.  அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது.  பணி அனுபவத்துக்குஅதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும்,பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால்,5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அ...
தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10,000 பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வில் பாதிப்பு. தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளிகல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  இதன் காரணமாக 2004ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை போல் பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வருகின்றனர். ஆனால் இப்படி வரும் பட்டதாரி ஆசிரியர்களது மூதுரிமை பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த நாள் ஒன்றையே குறிப்பிட்டு பின்பற்றப்படுகிறது. அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளை கணக்கில் எடுத...
எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்தத் தீர்மானத்தை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் படிப்பு, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று உத்தரவிடுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. அரசுப் பணி, பதவி உயர்வுக்கு இதை வேதியியல் படிப்புக்கு இணையான படிப்பாகக் கருத வேண்டும் என்ற...